×

நடிகை ராஷ்மிகா மந்தனா பிறந்தநாள்...  'குபேரா' படக்குழு வாழ்த்து...!

 

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு  'குபேரா' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. 

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம்   'குபேரா' . இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே திருப்பதி, மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.