அசத்தல் லுக்கில் ரித்திகா சிங்... வைரலாகும் புகைப்படங்கள் !
அசத்தல் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை ரித்திகா சிங் வெளியிட்டுள்ளார்.
மாதவன் நடித்த ‘இறுதிசுற்று’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீராங்கணையாக சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர். முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்ற ரித்திகா, தற்போது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
அசோக் செல்வனுடன் அவர் நடித்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தமிழில் அரவிந்த்சாமியுடன் ’வணங்காமுடி’, அருண்விஜய்யுடன் ‘பாக்ஸர்’, விஜய் ஆண்டனியுடன் 'கொலை' உள்ளிட்ட படங்களில் ரித்திகா சிங் நடித்து முடித்துள்ளார்.
சோசியல் மீடியாக்களை ஆக்டிவாக ரித்திகா, பல போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ரித்திகா சிங் மாடர்ன் லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.