ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் ரோஜாவின் மகள்... அட.. யாருக்கு ஜோடின்னு பாருங்க !

பிரபல நடிகையான ரோஜாவின் மகள் தெலுங்கு சினிமா படம் ஒன்றின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். தனது அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ள அவர், சினிமா வாய்ப்பு குறைந்ததால் ஆந்திர அரசியல் பக்கம் சென்றுவிட்டார்.
சினிமாவிற்கு பிறகு இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு அன்சுமாலிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தனது மகளை தெலுங்கு திரையுலகில் நடிகை ரோஜா, கதாநாயகியாக அறிமுகப்படுத்தவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார். துருவ் விக்ரம் நடிக்கும் முதல் தெலுங்கு படமாக இப்படம் உருவாகவிருக்கிறது.
நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் இளம் நாயகனாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'ஆதித்ய வர்மா' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'மகான்' படத்தில் தனது அப்பா விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.