இந்தி நடிகருடன் காதலில் விழுந்தாரா நடிகை சமந்தா?
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த சமந்தா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளார். இந்த நிலையில் சமந்தாவுக்கும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூரின் முதல் மனைவியின் மகனும் இந்தி நடிகருமான அர்ஜுன் கபூருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு, இந்தி இணையதளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சமந்தா மும்பை செல்லும் போதெல்லாம் அர்ஜுன்கபூர் வீட்டில் தங்குவதாகவும், விருந்துகளுக்கும் இருவரும் ஜோடியாக செல்வதாகவும் கூறப்படுகிறது. விரைவில் சமந்தாவும், அர்ஜுன் கபூரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் கிசுகிசுக்கின்றனர். ஆனாலும் இருவர் தரப்பிலும் இதனை உறுதிப்படுத்தவில்லை.