×

நடிகை சம்யுக்தா மேனனுக்கு விரைவில் திருமணம்

 

தமிழ் சினிமாவில் களரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன். இவர் இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து தீவண்டி என்ற படத்தில் நடித்தார். மலையாளத்தில் வெளியான இப்படத்தில் டொவினோ தாமஸ் நாயகியாக நடித்திருப்பார். அப்படியே மலையாளம் பக்கம் சென்றவர், உயரே படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அடுத்து, யமந்தன் பிரேமாகதா எனும் படத்தில் நடித்தார். அடுத்தடுத்து மலையாளம் தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். 

அவர் தனது நண்பரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அடுத்து இந்த ஆண்டுக்குள் இருவரின் திருமணமும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.