×

‘லியோ’ படத்தில் இணைந்த மலையாள நடிகை – வெளியான மாஸ் அப்டேட்.

 

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ திரைப்படத்தில் மலையாள நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், மேத்தியூ தாமஸ், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர்அலிகான் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் படி முதற்கட்ட படப்பிடிப்பு கஷ்மீரில் கடும் குளிரில் நடந்து முடிந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தில் மலையாள நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர், மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான ‘திரிஷ்யம்2’ படத்தில் நடித்து பிரபலமான சாந்தி மாயாதேவி. இவர் லோகேஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதனை உறுதிபடுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மாய தேவி மோகன்லால் நடிப்பில் தயாராகிவரும் ராம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லோகேஷின் ‘லியோ’ படம் வரும் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.