×

 ஹை வேல்டேஜ் கிளாமரில் ஷாலினி பாண்டே... வைரலாகும் புகைப்படம் 

 

உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை நடிகை ஷாலினி பாண்டே வெளியிட்டுள்ளார். 

தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. கன்னத்தில் குழி விழும் அழகு, பப்லியான தோற்றம், க்யூட் லுக் என ரசிகர்கள் வர்ணிக்கும் அழகு தேவதையாக சினிமாவில் வலம் வருகிறார். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இவருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவான ‘100% காதல்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து நடிகையர் திலகம், கொரில்லா உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார். ஆனால் தெலுங்கை போன்று தமிழ் ரசிகர்களை அவர் கவரவில்லை. அதனால் மீண்டும் தெலுங்கு சினிமாவிற்கே திரும்பிய ஷாலினி பாண்டே, அங்கு சில படங்களில் நடித்து வருகிறார். அதோடு இந்தியிலும் கால்பதித்துள்ள ஷாலினி, ரன்பீர் கபூருடன் இணைந்து ‘அனிமல்’ படத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷாலினி பாண்டே, தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் உடையில் இருக்கும் கிளாமர் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.