×

கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை ஷெரீன்

நடிகை ஷெரீன் இன்று தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஷெரீன். இந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்து இளைஞர்களை கவர்ந்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களின் அன்பை பெற்றார். இதற்கிடையே கொரானா பரவல் அதிகரித்து வருவதால் பிரபல சினிமா நட்சத்திரங்கள்
 

நடிகை ஷெரீன் இன்று தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஷெரீன். இந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்து இளைஞர்களை கவர்ந்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களின் அன்பை பெற்றார்.

இதற்கிடையே கொரானா பரவல் அதிகரித்து வருவதால் பிரபல சினிமா நட்சத்திரங்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஏற்கனவே நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சாக்ஷி அகர்வால், ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் நடிகை ஷெரீன் இன்று தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். தான் தடுப்பூசி போட்டுக்கொண்டதை தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படமாக எடுத்து பதிவிட்டுள்ளார்.