நடிகை சிம்ரன் பிறந்தநாள்... ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழு வாழ்த்து...!

நடிகை சிம்ரனின் பிறந்தநாளை முன்னிட்டு டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழு சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன்.1995ம் ஆண்டு வெளியான சனம் ஹர்ஜாய் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். விஐபி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவருக்கு முதல் படமே செம ஹிட். அடுத்து விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் படத்தில் நடித்தார்.
இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு நேருக்கு நேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி என வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்து மக்களின் மனதை வென்றார். தற்போது சசிகுமார் உடன் இணைந்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் நடித்து வருகிறார். இருவரும் கணவன் – மனைவியாக நடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.