"இதுவரை எனக்கு பிடித்தமான ஒருவரை சந்திக்கவில்லை"-சுருக்கென்று பேசிய சுருதி ஹாசன்
Jul 7, 2025, 11:59 IST
நடிகை சுருதி ஹாசன் நடிகர் கமல் ஹாசனின் மகளாவார் .இவர் தமிழ் ஹிந்தி என்று பல மொழி படங்களில் நடித்து வருகின்றார் .இவர் தமிழில் நடித்த எதிர்நீச்சல் முதல் ஏழாம் அறிவு வரை பல படங்கள் வசூலை வாரி குவித்துள்ள படங்கள் ஆகும் .மேலும் இவர் தற்போது ரஜினியின் கூலி படத்திலும் நடித்து வருகின்றார் .இவரின் காதல் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வந்திருக்கின்றன .இவர் தமிழில் தனுஷ், விஜய், அஜித், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.சுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்தப் பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும், ஹே ராம் (தமிழ் மற்றும் இந்தி), என் மன வானில், வாரணம் ஆயிரம், லக் (இந்தி) மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களைப் பாடியுள்ளார்.
'சலார்' படத்தில் பிரபாஸுடன் நடித்த ஸ்ருதி, தற்போது ரஜினியின் 'கூலி' மற்றும் 'சலார் 2' படங்களில் நடித்து வருகிறார். திருமணம் குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் தவிர்த்து வந்த ஸ்ருதி, தற்போது தனது மனதைத் திறந்து பேசியுள்ளார்.
“காதலிப்பது பிடிக்கும். ஆனால், இதுவரை எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவரை சந்திக்கவில்லை. திருமணத்தைப் பற்றி யோசித்ததில்லை. ஆர்வமும் இல்லை. ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?” என்று ஸ்ருதி கூறியுள்ளார்.