மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை சுனைனா
Oct 21, 2023, 19:25 IST
சுனைனா நடிப்பில் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ரெஜினா. இந்தப் படத்தை டோமின் டி சில்வா இயக்கியிருந்தார். எல்லோ பியர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் இப்படம் தயாரிக்கப்பட்டது. சதீஷ் நாயர் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் சுனைனாவுடன் இணைந்து விவேக் பிரசன்னா, நிவாஸ் ஆதித்தன் மற்றும் பலர் நடித்திருந்தனர். கதாநாயகியை முன்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் கடந்த ஜூன் மாதம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகை சுனைனா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விரைவில் குணமடைந்து வருவேன் என்று பதிவிட்டு புகைப்படம் ஒன்றையும் வௌியிட்டுள்ளார்.