×

சிறிய பட்ஜெட் படங்கள் பெரும் சவாலை சந்திக்கின்றன - நடிகை டாப்ஸி

 

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான டாப்ஸி, வந்தான் வென்றான், கேம் ஓவர், பிங்க் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். தமிழ் மட்டுமன்றி இந்தி சினிமாவிலும் அவர் பிஸியாக நடித்து வருகிறார். இந்திய அளவில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் டாப்ஸி அதிக கவனம் செலுத்தி வருகிறார். டாப்ஸி தற்போது கிரிக்கெட் வீராங்கனை முதலி ராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் சபாஷ் மித்து படத்தில் நடித்தார். அடுத்து, ரஷ்மி ராக்கெட் படத்தில் நடித்திருக்கிறார். 

இந்நிலையில், திரைத்துறை தொடர்பாக பேசிய அவர், குறைந்த பட்ஜெட் படங்கள் திரைக்கு வந்து வரவேற்பை பெறுவதில் பெரும் சிக்கல்களை அனுபவிக்கின்றன. சிலர் குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் தரமாக இல்லை என்று முத்திரை குத்திவிடுகின்றனர் என தெரிவித்தார்.