அட்ராக்‌ஷன் லுக்கில் தன்யா ரவிச்சந்திரன்... வைரல் புகைப்படங்கள் ! 

 
TanyaRavichandran
நடிகை தன்யா ரவிச்சந்திரன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் தன்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிருந்தாவனம் ‘, ‘கருப்பன்’, ‘மாயோன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் நடித்த கருப்பன் திரைப்படம் நல்ல பெயரை கொடுத்தது. 

TanyaRavichandran

அதன்பிறகு தெலுங்கு பக்கம் சென்ற அவர், 4 ஆண்டுகள் தமிழில் நடிக்கவில்லை. பின்னர் நெஞ்சுக்கு நீதி, ட்ரிகர், காட்பாதர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘அகிலன்’ படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாக நடித்தார்.  தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் புடவையில் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.