நெத்திச்சுட்டி அணிந்து வந்து மனம் கவரும் கருப்பன் நடிகை!
நடிகை தன்யா ரவிச்சந்திரனின் புடவை அணிந்த போட்டோஷூட் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
நடிகை தன்யா ரவிச்சந்திரன் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் சில நடித்த அவருக்கு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ‘கருப்பன்’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தின் மூலம் தன்யா தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
தற்போது தன்யா சுந்தரபாண்டியன் இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட படமாக அப்படம் உருவாகி வருகிறது. இதையடுத்து சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். சிபி சத்யராஜ் உடன் மாயோன் என்ற படத்திலும் தன்யா நடித்து வருகிறார்.
தன்யா சோசியல் போட்டோஷூட் எப்போதாவது தான் வெளியாகும். தற்போது வெளியாகியுள்ள தன்யாவின் புடவை அணிந்து நெத்திச்சுட்டி இட்டு அழகை அள்ளித்தெளிக்கும் போட்டோஷூட் இளைஞர்களைக் கவர்ந்து வருகிறது.