வீர தீர சூரன் படம் குறித்து நடிகை துஷாரா விஜயன் நெகிழ்ச்சி பதிவு...!
வீர தீர சூரன் படத்தில் நடித்தது குறித்து நடிகை துஷாரா விஜயன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
விக்ரம் நடிப்பில் சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. இப்படத்தை ரியா ஷிபு தயாரித்திருக்க எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 27ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் வெளியீட்டுக்கு எதிராக படத்தில் முதலீடு செய்த மும்பையைச் சேர்ந்த நிறுவனம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் 27ஆம் தேதி காலை முதல் படம் வெளியாகவில்லை. பின்பு அன்று மாலையே இந்த பிரச்சனை முடிவுக்கு வர மாலை காட்சி முதல் திரையிடப்பட்டு வருகிறது.
விக்ரம் சாருடன் ஸ்க்ரீனை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியான ஒன்று. எனக்குத் தெரிந்த காளி, நிச்சயமாக நீங்கள் நினைப்பது போல் சீரியஸான ஆள் இல்லை. படப்பிடிப்பில் விக்ரம் சாரின் எனெர்ஜியும் டெடிகேஷனும் உண்மையிலேயே ஊக்கமளித்தது” எனக் குறிப்பிட்டு எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், தயாரிப்பாளர் ரியா ஷிபு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இப்படத்தில் காளி என்ற கதாபாத்திரத்தில் விக்ரமும் கலைவாணி என்ற கதாபாத்திரத்தில் துஷாரா விஜயனும் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.