×

பிறந்தநாள் கொண்டாடும் திரிஷா... சர்ப்ரைஸ் கொடுத்த 'லியோ' படக்குழு !

 

 பிறந்தநாள் கொண்டாடும் நடிகை த்ரிஷாவுக்கு 'லியோ' படக்குழு சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளது. 

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகர் திரிஷா.  முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ள அவர், தற்போது தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதனால் இன்றைக்கும் பிஸியான நடிகையாகவே த்ரிஷா இருந்து வருகிறார். 

தற்போது விஜய்யுடன் இணைந்து 'லியோ' படத்தில் திரிஷா நடித்த வருகிறார்.  கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - திரிஷா கூட்டணி இணைந்துள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் ‌. இதற்கிடையே நடிகை திரிஷா தனது 40 வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் திரிஷா பிறந்தநாளையொட்டி அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக 'லியோ'  படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.‌ பேக்கரி ஒன்றில் விஜய் மற்றும் திரிஷா பேசிக் கொண்டிருக்கும் அந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.