×

விஜயகாந்த் மறைவுக்கு நடிகை த்ரிஷா, குஷ்பு, சிம்ரன் இரங்கல்

 

கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. தொடர்ந்து வெற்றிகொடி நாட்டிய அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் வாழ்விலிருந்து விலகினார். இருந்தும் அறிக்கை வாயிலாக அரசியல் செய்தார். இந்த நிலையில் சமீபகாலமாக உடல்நிலை மிகவும் மோசமாகவே தொடர் சிகிச்சையில் இருந்து வந்த விஜயகாந்த் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  இன்று காலமானார். அவரது இறப்பு செய்தி பலரையும் அதிரவித்துள்ளது. தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் இரங்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகையும், அரசியல் பிரபலமும் ஆன குஷ்பு, கேப்டன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தங்கம் போன்ற மனசு கொண்ட ஒரு வைர மனிதரை இழந்து விட்டோம். அவரது குடும்பத்திற்கு வருத்தத்தை தெரிவித்து கொள்வதாக அவர் பதிவிட்டுள்ளார். காதல் சித்திரம், சிம்மாசனம் உள்ளிட்ட திரைப்படங்களில் விஜயகாந்த்துடன் இணைந்து குஷ்பு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.