மீண்டும் தனுஷூக்கு ஜோடியாகும் திரிஷா.. புதிய படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு !
தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் தனுஷ். அந்த வகையில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற உள்ளது.
இந்த படத்தையடுத்து தனது 50வது படத்தை தனுஷே இயக்கி நடிக்கவுள்ளார். 'ராயன்' என்று தலைப்பில் உருவாகும் இந்த படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
தனுஷின் 50வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடைசியாக ‘கொடி’ படத்தில் தனுஷூக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.