×

அசத்தலான லுக்கில் விஜே அர்ச்சனா.. கலக்கல் புகைப்படங்கள் !

 

பிரபல விஜே அர்ச்சனாவின் மயக்க வைக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

ரசிகர்களிடையே விஜேவாக அறிமுகமானவர் நடிகை அர்ச்சனா. அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமானார். இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இந்த சீரியல் அர்ச்சனாவிற்கு நல்ல ஓபனிங்கை தந்தது. 

சின்னத்திரையை தொடர்ந்து நீண்ட நாட்களாக வெள்ளித்திரையில் நடிக்க விஜே அர்ச்சனா முயற்சி செய்து வந்தார். அதன் பலனாக சமீபத்தில் 'ராஜாராணி' சீரியலில் இருந்து விலகி அருள்நிதி நடிக்கும் 'டிமான்டி காலனி 2' படத்தில் இணைந்தார். இந்த படத்தில் அருள்நிதிக்கு தங்கையாக விஜே அர்ச்சனா நடித்துள்ளார். 

இந்நிலையில் மயக்க வைக்கும் அழகில் இருக்கும் புகைப்படங்களை விஜே அர்ச்சனா வெளியிட்டுள்ளார். வெல்வெட் உடையில் மின்னும் அழகில் இருக்கும் அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.