பகத் பாசிலுக்கு இப்படி ஒரு நோயா? தென்னிந்திய திரையுலகினர் அதிர்ச்சி
May 28, 2024, 17:49 IST
பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களிடம் பேசிய ஃபகத் தனக்கு ADHD எனப்படும் நரம்பியல் குறைபாடு உள்ளதாக கூறியுள்ளார்.
கேரளாவின் கொத்தமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண் பகத் பாசில், தனக்கு ADHD பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். குழந்தைகளிடையே அதிகமாக பரவும் இந்த நோயை,சிறுவயதிலேயே இதைக் கண்டறிந்தால் இதனை குணப்படுத்தலாம் ஆனால் 41 வயதில் தனக்கு குணப்படுத்த முடியுமா என மருத்துவரிடம் கேட்டதாக நடிகர் பகத் பாசில் கூறியுள்ளார்.
ஏ.டி.ஹெச்.டி என்பது கவனக்குறைவு மற்றும் அதிக செயல்பாடு. இது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு எனக் கூறப்படுகிறது. இது மூளையின் கவனம், நடத்தை மற்றும் திறனைப் பாதிக்கிறது.