ஹிப்ஹாப் தமிழா ஆதியின் கலக்கலான இசையில் 'வீரன் திருவிழா'... 'வீரன்' மூன்றாவது பாடல் !
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள 'வீரன்' படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரிக்கும் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அந்த வகையில் அந்நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஆதி நடிக்கும் திரைப்படம் ‘வீரன்’. இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.சரவணன் இயக்கியுள்ளார். ஆதியே இசையமைத்துள்ள இப்படத்திற்கு தீபக் டி மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவுள்ளார். ஃபேன்டஸி காமெடி, ஆக்ஷன் என்டர்டெய்னராக படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழில் சூப்பர் ஹீரோ படமாக உருவாகியுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் ஜூன் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 'வீரன் திருவிழா' என்ற பெயரில் உருவாகியுள்ள அந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.