×

அஜித்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?... ஃபேன் பாய்க்கு அடித்த ஜாக்பாட்...

 

அஜித் தற்போது மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகின்றார். கடந்த பத்து மாதங்களாக அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ஒரே இழுபறியாகவே இருந்தது. கதை மாற்றம் இயக்குனர் மாற்றம் என பல சர்ச்சைகள் சுற்றி வந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது. படத்தில் அஜித்துடன் த்ரிஷா மற்றும் ரெஜினா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் 63 ஆவது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் வெளியான மார்க் ஆண்டனி படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த ஆதிக் அடுத்ததாக அஜித்தை இயக்க போகின்றார் என்ற தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், படத்தை எல்ரெடு குமார் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.