×

‘நான் ரெடி தான் வரவா’ – குத்தாட்டம் போட்ட ‘அதிதி ஷங்கர்’.

 

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து பக்கா மாஸ்ஸாக தயாராகிவரும் படம் ‘லியோ’. இந்த ஆண்டில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களுள் இதுவும் ஒன்று. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் படு ஜோராக நடந்து வருகிறது. குறிப்பாக படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடலாக வெளியான ‘நான் ரெடி தான் வரவா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச். அந்த பாடலுக்கு பலரும் ரீல் செய்து வீடியோ போடும் நிலையில் தற்போது கோலிவுட்டின் இளம் கதாநாயகியும், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகளுமான அதிதி ஷங்கர் குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதிதி முதல் படத்திலேயே கார்த்தியுடன் ஜோடிபோட்டு ‘விருமன்’ படத்தில் நடித்தார். அடுத்து சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ படத்தில் நடித்தார். தற்போது ராஜேஷ் எம். செல்லப்பா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் காருக்குள் அமர்ந்து லியோ படத்தின் ‘நான் ரெடி தான் வரவா’ பாடலுக்கு  சூப்பரான ஸ்டெப்புகளை போட்டு வீடியோ வெளியிட்டு அசத்தியுள்ளார்.