×

 ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் அதிதி ராவ் ஹைதரி... பூஜையுடன் தொடங்கிய புதிய படம் !

 

ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் அதிதி ராவ் ஹைதரி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் இன்று தொடங்கியது. 

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் அதிதி ராவ் ஹைதரி. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு ‘செக்கக் சிவந்த வானம்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சைக்கோ’ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்திருந்தார். அதேபோன்று விஜய் சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்தார். இந்நிலையில் தமிழில் புதிய படம் ஒன்றில் அதிதி ராவ் நடிக்கிறார். கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. 

 கமலின் ‘தூங்காவனம்’, விக்ரமின் ‘கடாரம் கொண்டேன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான ராஜேஷ் எம்.செல்வா இந்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்திற்காக தொடக்கவிழா பூஜையுடன் இன்று தொடங்கியது. ஆஹா ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.