நானியை தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்கும் சிபி
அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் 'டான்'. இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஆண்டு மே 13-ஆம் தேதி வெளியானது.
அப்பா - மகன் பாசம் குறித்தும், கல்லூரி வாழ்க்கை குறித்தும் பேசிய இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் 'டான்' வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் சிபி சக்கரவர்த்தி கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. ஏற்கனவே கமிட் ஆகியுள்ள இரண்டு படங்களை முடித்து விட்டு மீண்டும் சிபி சக்கரவர்த்தி படத்தில் நடிப்பதாக சிவகார்த்திகேயன் உறுதி அளித்துள்ளார்.