×

விபத்துக்கு பின் நிதானமாக செயல்பட்ட அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ வைரல் 
 

 

ஸ்பெயின் நாட்டில் வாலன்சியாவில் நடைபெற்ற கார் ரேஸின் போது அஜித் குமார் சென்ற கார் விபத்துக்குள்ளானது. 


அஜித் குமார் தற்போது ஸ்பெயின் நாட்டில் வாலன்சியாவில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் பங்கேற்றார். இதில், அவர் 5ஆவது சுற்று வரை சிறப்பாக செயல்பட்டு 14ஆவது இடம் பிடித்தார். ஆனால், 6ஆவது சுற்றின் போது அஜித் கார் மீது மற்ற கார்கள் மோதியதில் 2 முறை விபத்து ஏற்பட்டு  முதல் விபத்து ஏற்பட்ட போது அஜித் அதிலிருந்து மீண்டு உடனே டிராக்கில் செயல்பட்டார். ஆனால், 2ஆவது முறை நிகழ்ந்த கார் விபத்தின் போது அவரது பல்டி அடிக்கவே அஜித் 2 முறை கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இது ரசிகர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.