×

உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து ரஜினியுடன் மோதும் ஃபகத்

 

உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து ரஜினிக்கு வில்லனாக களம் இறங்கியுள்ளார் ஃபகத் ஃபாசில்.

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து 170-வது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. ஞானவேல் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்களில் தொடங்கி நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, படத்தில் மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தமாகி இருக்கின்றனர். துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர். இது தவிர, ராணா டகுபதியும் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் அவர் வில்லனாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.