×

டிமான்டி காலனி -2 படம் பார்த்து நாங்களே பயந்துட்டோம் - சாம் சி.எஸ்.

 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘டிமான்டி காலனி 2’. கடந்த 2015-ஆம் ஆண்டு இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. வித்தியாசமான ஹாரர் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தின் பணிகள் கடந்தாண்டு தொடங்கியது. இரண்டாம் பாகத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் ஆன்ட்டி ஜாஸ்கெலைன், டிசேரிங் டோர்ஜோ, அருண் பாண்டியன், முத்துகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனா காலிட், விஜே அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றன. இந்த படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில், இப்படம் குறித்து பேசிய இசை அமைப்பாளர் சாம் சிஎஸ், டிமான்டி காலனி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், படத்தை பார்த்தபோது நாங்களே பயந்துவிட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.