பைக்கை திருப்பி ரூட்டை மாற்றிய அஜித் - மீண்டும் உலக பைக் சுற்றுலா இந்த முறை எந்தெந்த நாடுகள் தெரியுமா!
மீண்டும் உலக சுற்றுபயணத்தை துவங்கிய நடிகர் அஜித்
பைக் ஓட்டுவதில் அதீத ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பைக் சுற்றுலா செல்லவேண்டும் என்பதுதான் அவரது ஆசை. அந்த வகையில் தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் பைக் ரைடு புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், நடிகர் அஜித், இயக்குநர் மகிழ்திருமேனி கூட்டணியில் தயாராகும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஷுட்டிங் இம்மாதம் துவங்கும் என கூறப்பட்டது. அது தொடர்பான செய்தி வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அஜித்தின் உலக சுற்றுபயண புகைப்படம் வெளியாகி ஷாக் கொடுத்துள்ளது. அஜித் இந்த முறை ஜெர்மன், டென்மார்க், நார்வே போன்ற நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதனால் அஜித்தின் ரசிகர்கள் இணையத்தில்’எப்போது படத்தை துவங்குவீங்க’ என புலம்பி வருகின்றனர். விஜய் எப்படி நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் குதிக்கப்போகிறார் என செய்திகள் பரவி வருகிறதோ, அதேப்போல தற்போது அஜித்தும் சினிமாவிற்கு குட்பை சொல்லிவிட்டு பைக்கை திருப்பி ரூட்டை மாற்றுவார் என தகவல்கள் பரவி வருகிறது.