×

‘வேட்டையன்’ படத்தில் நடைபெறும் ‘ஏஐ’ மாற்றம்: சமூக வலைதள கருத்துகளின் எதிரொலி

 

சமூக வலைதளங்களில் எழுந்த கருத்துகளை அடுத்து, ‘வேட்டையன்’ படத்தில் சில மாற்றம் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சமீபத்தில் ‘வேட்டையன்’ படத்தின் டீசர் வெளியானது. இதில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்துக்கு பிரகாஷ்ராஜ் பின்னணி குரல் கொடுத்திருந்தார். இது தொடர்பாக இணைய வெளியில் பல்வேறு கருத்துகள் வெளியாகின. ‘அமிதாப் பச்சனுக்கான பின்னணி குரல் அறவே ஒட்டவே இல்லை’ என பலரும் தெரிவித்தார்கள். <a href=https://youtube.com/embed/pE1qTi_Lt8E?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/pE1qTi_Lt8E/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்தக் கருத்துகளை முன்வைத்து அமிதாப் பச்சன் கதாபாத்திரத்துக்கு அவருடைய குரலையே அனைத்து மொழிகளிலும் உபயோகிக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் இதனை சாத்தியப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பணிகள் இன்னும் இரண்டு நாட்களில் முடிந்துவிடும் என தெரிகிறது.

அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘வேட்டையன்’. தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.