×

டப்பிங்கை நிறைவு செய்த ஐஸ்வர்ய லஷ்மி.... துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா’ புதிய அப்டேட் 

 

‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டப்பிங்கை நடிகை ஐஸ்வர்ய லஷ்மி நிறைவு செய்துள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருக்கும் துல்கர் சல்மான், தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மிரட்டலான தோற்றத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.  இப்படம் ஓணம் பண்டிகையையொட்டி வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார்.  இவர்களுடன் செம்பன் வினோத் ஜோஸ், ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் ஷபீர், பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்து வருகின்றனர்.

இந்த படம்  தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் தனது பகுதி டப்பிங்கை நடிகை ஐஸ்வர்ய லஷ்மி நிறைவு செய்துள்ளார். இது குறித்து புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.