×

தங்க சிலையாக மாறிய ‘ஐஸ்வர்ய லெட்சுமி’.

 

மலையாள திரையுலகின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்ய லட்சுமி. இவர் மாய நதி, வரதன்,பிரதர்ஸ் டே உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘ஆக்ஷன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். தொடர்ந்து தனுஷுடன் இணைந்து ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்தார். அடுத்து  பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்.

தொடர்ந்து இவர் நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் இவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது. நடிப்பதை கடந்து சாய்பல்லவி நடித்த ‘கார்கி’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்ய லெட்சுமி தற்போது துல்கர் சல்மானுடன் இணைந்து ‘கிங் ஆப் கோதா’ படத்தில் நடித்துள்ளார். அதற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தங்கசிலை போல மஞ்சள் நிற உடையில் அழகோவியமாக காட்சியளித்துள்ளார்.