×

கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

 

தென்னிந்திய திரை உலகில், அனைவராலும் அறியப்பட்ட ஹீரோயினாக மாறி உள்ளவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படம் ஒரு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது.இதன் பின்னர் புத்தகம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் பண்ணையாரும் பத்மினி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ், போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு.. 'காக்கா முட்டை' திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.

தற்போது தமிழ் படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான ஃபர்ஹானா திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதை பெற்றார். 

தற்போது கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க, போன்ற தமிழ் படங்களிலும் இரண்டு மலையாள படங்கள் மற்றும் ஒரு கன்னட திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வபோது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.பெரிதும் கவர்ச்சியில் ஆர்வம் காட்டாத இவர் தற்போது கிளாமர் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.