×

ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களுக்கு தடையா ?... இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தல் !

 

பர்ஹானா மற்றும் புர்கா ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் தடை விதிக்கவேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர். 

பிரபல நடிகையான ஐஸ்வர்யா நடிப்பில் ‘ஐரா’ படத்தின் மூலம் இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வெளியான ‘புர்கா’. இந்த படத்தில் கலையரசன் மற்றும் மிர்னா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 7-ஆம் இப்படம் நேரடியாக ஆஹா ஓடிடித்தளத்தில் வெளியான இப்படம் இஸ்லாமிய பெண்கள் குறித்து பேசியது. 

அதேபோன்று ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஃப்ர்ஹானா'. இந்த படத்தை 'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்' ஆகிய  வித்தியாசமான படங்கள் மூலமாக மக்களின் ஈர்த்த இயக்குனர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். சமீபத்தில் டீசர் வெளியான இப்படம் வரும் மே 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பர்ஹானா மற்றும் புர்கா ஆகிய இரண்டு படங்களையும் உடனடியாக தடை செய்யவேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து இந்திய தேசிய லீக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ‘புர்கா’ திரைப்படம் இஸ்லாமிய பண்பாட்டுக்கு எதிராகவும், கொச்சைப்படுத்தும் விதமாகவும் உள்ளது. 

அதேபோன்று ‘ஃபர்ஹானா’ திரைப்படம், புர்கா அணிந்துக் கொண்டு உலகம் முழுவதும் பெண்கள் விபாச்சாரம் செய்வது போன்று டீசரில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிராக இருக்கும் புர்கா மற்றும் பர்ஹானா ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.