×

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால்சலாம்’ படப்பிடிப்பு எப்போது ?... புதிய அப்டேட் 

 

 ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘லால்சலாம்’ படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘3’, ‘வைராஜா வை’ ஆகிய படங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ‘லால்சலாம்’. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். அவர் கிரிக்கெட் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியுடன் இணைந்து நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். 

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்‌.ரகுமான் இசையமைத்து வருகிறார். கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இந்த படம் உருவாகவுள்ளது. ‘லால்சலாம்’ படம் பூஜையுடன் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. இதையடுத்து இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. காரைக்குடியில் தொடங்கும் இந்த படப்பிடிப்பில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. ‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு ரஜினி இந்த படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.