ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம்..!
Mar 5, 2025, 15:10 IST
ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடைசியாக வெளியான லால் சலாம் திரைப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. ரஜினிகாந்த் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தானே தயாரித்து படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த படத்தில் முழுக்க முழுக்க இளம் நடிகர்கள் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.