×

என்ன சொல்றீங்க... அவங்க ஐஸ்வர்யாவின் பினாமியா ?... ஈஸ்வரியின் வாக்கு மூலத்தால் பரபரப்பு !

 

தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி என்று நகைகளை திருடிய ஈஸ்வரி கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கிறார். அவர் கடந்த மாதம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கூறிய புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் நான் கடந்த மூன்று வருடங்களாக என்னுடைய நகைகளை லாக்கரில் வைத்திருந்தேன்.‌ அதில் இருந்த விலை மதிப்பு மிக்க நகைகள் லாக்கரை திறக்காமலே மாயமாகியுள்ளது. 

நான் லாக்கரில் நகைகளை வைத்திருந்ததும், அதன் சாவி எங்கே இருக்கிறது என்பது என்னுடைய வீட்டில் பணியாற்றும் மூன்று பேருக்கு நன்றாக தெரியும். நான் இல்லாத நேரத்தில் அவர்கள் சென்று வந்துள்ளனர். அதனால் அவர்களை விசாரிக்க வேண்டும் என்று அந்த புகார் கடிதத்தில் கூறியிருந்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், அந்த மூவரின் வங்கிக் கணக்கையும் தீவிரமாக ஆராய்ந்து வந்தனர். அதில் பணியாளர் ஈஸ்வரியின் வங்கிக் கணக்கில் கணக்கில் வராத பணம் இருந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் ஈஸ்வரியை விசாரித்தபோது, உண்மையை ஒத்துக்கொண்டார்.  நகைகளை அடகு வைத்து ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது ஈஸ்வரியிடம் இருந்து வீட்டின் பத்திரத்தை பறிமுதல் செய்த போலீசார், 20 சவரன் நகைகளை மீட்டுள்ளனர். ஈஸ்வரிக்கு உதவிய டிரைவர் இடமிருந்தும் 100 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். 

அதேநேரம் அளவுக்கு அதிகமான பண புழக்கத்தை பார்த்த ஈஸ்வரியின், கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீடு. என்னை பினாமியாக இருக்க சொல்லியிருக்கிறார். அதற்காக பணமும் கொடுத்துள்ளதாக மழுப்பலான பதிலை கூறியுள்ளார்.