×

செம்ம ஸ்டைலிஷ்ஷாக உருவாகியுள்ள 'பணக்காரி' பாடல்... 'சொப்பன சுந்தரி' ஃப்ர்ஸ்ட் சிங்கிள் !

 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'சொப்பன சுந்தரி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. 

 சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது நடித்து வந்த திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இந்த படத்தை ‘லாக்கப்’ படத்தின் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கி வருகிறார். டார்க் காமெடி ஜானரில் உருவாகி வரும் இப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மை கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் முதல் பாடலான பணக்காரி பாடல் வெளியிடப்பட்டுள்ளது.  துரை எழுதிய இந்த பாடலை அஜ்மல் மற்றும் துரை இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. 

<a href=https://youtube.com/embed/2B8C-R_8qw8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/2B8C-R_8qw8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">