×

விறுவிறுப்பாக நடைபெறும் 'லால் சலாம்' ஷூட்டிங்... புதிய அப்டேட் 

 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'லால்சலாம்' படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. .

சூப்பர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்து பிசியாகிவிட்டார். ஏற்கனவே ‘3’, ‘வைராஜா வை’ ஆகிய படங்களை இயக்கியுள்ள அவர் தற்போது தனது மூன்றாவது படமான ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார்.  லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்‌.ரகுமான் இசையமைத்து வருகிறார். 

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் காமெடி நடிகர் செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு இந்த படத்த​ி​ல் அவர் இணைவார் என கூறப்படுகிறது. 

 கிரிக்கெட் கதைக்களத்தை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு  தற்போது செஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் விஷ்ணு விஷால் மற்றும் செந்தில் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பு சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.