×

அடி தூள்... நாளை கோலாகலமாய் துவங்கும் ‘அஜித் 61’ படம்... சூப்பர் அப்டேட் ! 

 

அஜித்தின் 61வது படத்தின் படப்பூஜையுடன் படப்பிடிப்பு நாளை துவங்கவுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. 

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கவுள்ளார். ஜிப்ரான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்திற்காக இரண்டு பாடல்களுக்கு ஜிப்ரான் இசையமைத்துவிட்டார். 

நிரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார். இந்த படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதோடு தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களும் இந்த படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தில் நடிகர் அஜித் பேராசிரியராக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அஜித்தின் கெட்டப்பும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் முதற்கட்ட பணிகள் நிறைவுபெற்றுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் நாளை காலை துவங்கவுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.  இந்த படத்திற்காக ரமோஜி பிலிம் சிட்டியில் மவுண்ட் ரோடு போன்று செட் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் முதன்முதலில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.