×

கொரியன் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளாரா அஜித் ?.. தீயாய் பரவும் தகவல் !

 

 கொரியன் படத்தின் ரீமேக்கில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘துணிவு’ படத்திற்கு நடிகர் அஜித், யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று ரசிகர்கள் ஆர்முடன் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித்தின் 62வது படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கதையில் திருப்தியில்லை என்பதால் தயாரிப்பு நிறுவனத்தால் அவர் நிராகரிக்கப்பட்டார் 

அதன்பிறகு ‘தடம்’, ‘கலகத்தலைவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கி மகிழ் திருமேனி, அஜித்தின் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இன்னும் இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தின் அறிவிப்பை லைக்கா அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதனால் இந்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் அஜித் 62வது படம் குறித்து புதிய தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. அதில் சமீபத்தில் புகழ்பெற்ற கொரியன் படம் ஒன்றின் ரீமேக் உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், அந்த படத்தில் தான் நடிகர் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறாரா அல்லது வேறு இயக்குனர் இயக்குகின்றரா என இன்னும் தகவல் வெளியாகவில்லை.