×

நம்ம ‘தல’-யா இது.. மனைவி ஷாலினியுடன் இருக்கும் ரொமென்டிக் புகைப்படங்கள்... 

 

அஜித் மற்றும் ஷாலினி ஜாலி டிரிப்படிக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. 

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக இருப்பவர்கள் அஜித் மற்றும் ஷாலினி. அமர்களம் படத்தின் மூலம் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இதையடுத்து கடந்த 2000-ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதிக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். 

இவர்களது காதல் மிகவும் சுவாரஸ்சியமானது. ‘அமர்களம்’ படத்தில் ஷாலினி கையை வெட்டிக் கொள்ளும் ஒரு காட்சி ஒன்று வரும். இந்த காட்சியில் உண்மையாகவே தனது கையை அறுத்துக் கொண்டார் ஷாலினி. இதனால் தனக்கு ஷாலினி மீது காதல் வந்ததாக நடிகர் அஜித், சில பேட்டிகளில் கூட கூறியுள்ளார். 

இப்படி இன்றைக்கு ரசிகர்கள் கொண்டாடும் ஜோடியாக அஜித் - ஷாலினி உள்ளனர். இந்நிலையில் அஜித் மற்றும் ஷாலினி ஜோடி ஜாலியாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கொண்டாடுகின்றனர். ரொமெண்ட்டிக் லுக்கில் இருக்கும் அழகான இந்த புகைப்படம் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது.