×

அஜித்திற்கு ஜோடியாகும் இரு கதாநாயகிகள்... ‘ஏகே 62’ முக்கிய அப்டேட் 

 

 அஜித்திற்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘துணிவு’ படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அஜித்தின் 62வது படமாக உருவாகும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.  இந்த படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாராகவுள்ளது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். 

இந்த படத்தில் வில்லனாக நடிகர் அரவிந்தசாமியும், காமெடியனாக நடிகர் சந்தானமும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர கதாநாயகியாக நடிகை திரிஷா நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில் கால்ஷீட் காரணமாக அவர் நடிக்கவில்லை. கதாநாயகிக்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் மிகுந்த சிரமப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளது. அதில் ஒன்று பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகை கீர்த்தி ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர். அஜித்திற்கு ஜோடியாக முன்னணி நடிகைகள் நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.