×

உதவி கேட்ட விஜய் ரசிகர்… முன்வந்து உதவிய அஜித் ரசிகர்கள்… ட்விட்டரில் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்!

பெரிய ஸ்டார் ஹீரோக்களின் ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் யார் கெத்து என்று காட்டுவதற்கு கருத்துப் போர் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. கோலிவுட்டில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் போர் எந்தளவற்கு இருக்கும் என்பது நம் அனைவர்க்கும் தெரிந்ததே. ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி பதிவிடுவது தான் வழக்கம். ஆனால் நேற்று இருவரது ரசிகர்களும் ஒற்றுமையாக பதிவிட்டது நியூட்ரல் ஆடியன்ஸ் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ட்விட்டரில் #AjithVijayPRIDEOfINDIA என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகியது. விஜய் ரசிகர் ஒருவர் திருச்சியில்
 

பெரிய ஸ்டார் ஹீரோக்களின் ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் யார் கெத்து என்று காட்டுவதற்கு கருத்துப் போர் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. கோலிவுட்டில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் போர் எந்தளவற்கு இருக்கும் என்பது நம் அனைவர்க்கும் தெரிந்ததே. ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி பதிவிடுவது தான் வழக்கம். ஆனால் நேற்று இருவரது ரசிகர்களும் ஒற்றுமையாக பதிவிட்டது நியூட்ரல் ஆடியன்ஸ் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ட்விட்டரில் #AjithVijayPRIDEOfINDIA என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகியது.

விஜய் ரசிகர் ஒருவர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது மாமாவின் மருத்துவ செலவுகளுக்காக  சமூக ஊடகங்களில் உதவி கோரியிருந்தார். அதற்காக பலர் பணமளித்து உதவினார். அதில் ஏராளமானோர் விஜய் ரசிகர்கள்.

இதுகுறித்து பதிவிட்ட அந்த இளைஞர் “உதவி செய்த அனைவருக்கும் மற்றும் குறிப்பாக முப்பதாயிரம் பங்களிப்பு செய்த அஜித் ரசிகர்களுக்கு நன்றி” என்று தெரிவித்திருந்தார. இந்த செயல் ரசிகர்களை சமூக ஊடகங்களில் #AjithVijayPRIDEOfINDIA என்ற ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் ஆக்க தூண்டியுள்ளது. இரு நடிகர்களின் ரசிகர்கள் ஒன்றாக இணைந்தது பலர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.