3.2 நொடியில் 100 கி.மீ. வேகம்.. அஜித் வாங்கிய ஆடம்பர ரேஸ் கார் - விலை எவ்வளவு தெரியுமா?
Sep 13, 2024, 15:40 IST
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அஜித். இவர் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்பதாத்தாக்கு மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. நடிப்பதை தவிர்த்து நடிகர் அஜித் கார் ரேஸில் மற்றும் பைக்கில் பல ஊர்கள் சென்று தன்னுடைய நேரத்தை செலவிட அதிகம் விரும்பவர். இந்நிலையில் நடிகர் அஜித் புது சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். போர்ச் GT3 RS ரக காரை அஜித் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு 4 கோடி ரூபாய் ஆகும். இதற்கு முன் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெராரி காரை வாங்கினார். இந்த காரின் புகைப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.