×

வலிமை படப்பிடிப்புத் தளத்தில் தீபாவளி கொண்டாடும் அஜித்!

இந்தாண்டு தீபாவளியை தல அஜித் வலிமை படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடுவதாகக் கூறப்படுகிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படம் ரேஸிங்கை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 25-ம் தேதி முதல் அஜித் ஹைதராபாத்தில் நடந்து வரும் வலிமை படப்பிடிப்பில் கலந்து வருகிறார். ஏற்கனவே லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு தாமதம் ஆகியிருப்பதால் அஜித் தீபாவளி தினத்திலும் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளாராம். எனவே, அஜித், கார்த்திகேயா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட
 

இந்தாண்டு தீபாவளியை தல அஜித் வலிமை படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடுவதாகக் கூறப்படுகிறது.

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படம் ரேஸிங்கை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 25-ம் தேதி முதல் அஜித் ஹைதராபாத்தில் நடந்து வரும் வலிமை படப்பிடிப்பில் கலந்து வருகிறார்.

ஏற்கனவே லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு தாமதம் ஆகியிருப்பதால் அஜித் தீபாவளி தினத்திலும் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளாராம்.

எனவே, அஜித், கார்த்திகேயா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட நடிகர்கள் இந்தாண்டு தீபாவளியை வலிமை படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாட உள்ளனராம். மொத்த படக்குழுவும் படப்பிடிப்பில் கலந்துகொள்கின்றனர். இதனால் அடுத்த வாரத்திற்குள் திட்டமிட்டபடிபடப்பிடிப்பை முடிக்க முடியும்.

வலிமை படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி எனும் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

அஜித் – எச்.வினோத் கூட்டணி இரண்டாவதாக ‘வலிமை’ படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.போனி கபூர் தயாரிக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.