×

விரைவில் ‘வலிமை’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அஜித்… ஹைதராபாத் நோக்கி பயணம்!

ஹைதெராபாத்தில் நடந்து வரும் வலிமை பட படப்பிடிப்பில் வரும் புதன்கிழமை முதல் அஜித் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.போனி கபூர் தயாரிக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். பொதுவாக, தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்தினால் ரசிகர்கள்
 

ஹைதெராபாத்தில் நடந்து வரும் வலிமை பட படப்பிடிப்பில் வரும் புதன்கிழமை முதல் அஜித் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.போனி கபூர் தயாரிக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

பொதுவாக, தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்தினால் ரசிகர்கள் கூட்டம் கூடிவிடும் என்பதால் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்துவது அஜித்தின் வழக்கம்.

கொரோனாவுக்கு முன்னர் படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்தது. தற்போது படக்குழு மீண்டும் படப்பிடிப்பிற்கு தயாராகியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு அஜித் இல்லாத காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது அஜித் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் புதன் கிழமை முதல் ராமோஜி பிலிம் சிட்டியில் நடக்கும் படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.