×

செல்ஃபி மோடில் அஜித் குமார்.. வைரலாகும் புது க்ளிக்ஸ்..

 
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். இதில் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது. திரைப்படங்கள் மட்டுமின்றி பைக் ரைடிங் செல்வதில் ஆர்வம் கொண்டவர் அஜித். இதுதவிர அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ரேசிங் பந்தயத்திலும் கலந்து கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே அஜித் குமார் எடுத்துக் கொண்ட செல்ஃபி படங்கள் வெளியாகி உள்ளது.