×

சால்ட் அண்ட் பெப்பரில் படு ஸ்லிம்மாக காட்சியளிக்கும் அஜித்... ‘குட் பேட் அக்லி’ புகைப்படம் வைரல்!
 

 

வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியகவுள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்துவரும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிப்பதை சமீபத்தில் நடிகர் பிரசன்னா உறுதி செய்தார். பொழுதுபோக்கு படங்களை மிகவும் வித்தியாசமான விதத்தில் தயார் செய்வது மூலம் ஆதிக் ரவிச்சந்திரன் கவனம் பெற்றார்.

கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'மார்க் ஆண்டனி' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஷால் கதாபாத்திரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அஜித்குமார் தனது வெறி பிடித்த ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் அஜித்குமார் இரண்டு அல்லது மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.