×

நடிகர் அஜித் வாங்கிய புதிய Ferrari கார்…விலை எவ்வளவு தெரியுமா ?

 


நடிகர் அஜித் துபாயில் ரூ. 9 கோடி மதிப்பில் Ferrari காரை வாங்கியுள்ளார். தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித். இவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.  இவரது நடிப்பில் விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது.  மேலும் குட்பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் பிரசாந்த் நீல்  இயக்கும் இரண்டு படங்களில் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களுக்காகவும் பிரசாந்த் நீல் மொத்தம் 3 ஆண்டுகள் கால்ஷீட் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் அஜித் சினிமாவை காட்டிலும் பைக் ரேசிங் செய்வதில் அதிகம் ஆர்வம் உள்ளவர் என்று நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.  இதனாலேயே அவர் நேரம் கிடைக்கும் போது எல்லாம் பைக் ட்ரிப் சென்று விடுவார்.  அவ்வப்போது அவர் ட்ரிப் சென்ற புகைப்படங்கள் வெளியாகும்.  இந்த நிலையில், நடிகர் அஜித் துபாயில் ரூ. 9 கோடி மதிப்பில் Ferrari காரை வாங்கியுள்ளார்.